Skip to main content

Posts

ஓட்ஸ் பனீர் பீஸ்

தேவையானவை : v   வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - அரை கப் v   துருவிய பனீர் - அரை கப் v   வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - 2 v   பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் v   பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் v   இஞ்சி விழுது - அரை டீஸ்பூன் v   பால் - ஒரு டேபிள்ஸ்பூன் v   ஓட்ஸ் - கால் கப் v   எண்ணெய் , உப்பு - தேவையான அளவு செய்முறை : ஓட்ஸை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.  ஒர் அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி , பனீர் , கொத்தமல்லித்தழை , இஞ்சி விழுது , பச்சை மிளகாய் விழுது , ஓட்ஸ் , உப்பு எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும்.  பிறகு பாலை சேர்த்து பிசைந்து விருப்பப்பட்ட வடிவங்களில் பிடித்து, தவாவில் எண்ணெய் விட்டு , சுட்டு எடுக்கவும்.
Recent posts

பட்டர் நாண்

தேவையான பொருட்கள் : Ø   மைதா - ஒரு கப் Ø   வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் Ø   தயிர் - 2 டீஸ்பூன் Ø   பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் Ø   பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் Ø   கொத்தமல்லித்தழை - சிறிதளவு Ø   உப்பு - தேவையான அளவு செய்முறை : Ø   ஒரு கிண்ணத்தில் மைதா , உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். Ø இதனுடன் உருக்கிய வெண்ணெய் , தயிர் , பூண்டு விழுது , கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். Ø   ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி , நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். Ø   தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது சிறிது தண்ணீரை தொட்டு தடவிக்கொள்ளவும். Ø   பின் தண்ணீர் தடவிய பகுதியை தவாவில் படும்படி போட்டு 5 நிமிடம் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். Ø   எடுத்த பின் எண்ணெய் தடவி பரிமாறவும்.

மாதுளை தோல் ஃபேஸ் பேக்

மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:  மாதுளை பொடி 1 டேபிள் ஸ்பூன்,  தேன் 1 டேபிள் ஸ்பூன்,  எலுமிச்சை சாறு 2-3 துளிகள்,  தயிர் 1 டேபிள் ஸ்பூன்,  தக்காளி சாறு 1 டேபிள் ஸ்பூன்,  பால் 2 டேபிள் ஸ்பூன்.  செய்முறை:  மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து வைத்துள்ள பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.  இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

கடலை குழம்பு

தேவையான பொருட்கள் : Ø   கருப்பு கொண்டைக்கடலை - 150 கிராம் Ø   தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி Ø   வெங்காயம் - 1 Ø   தக்காளி - 1 Ø   பச்சை மிள்காய் - 1 Ø   மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி Ø   மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி Ø   சீரகத்தூள் - 1 தேக்கரண்டி Ø   பெருஞ்சீரகத்தூள் - அரைதேக்கரண்டி Ø   மல்லித்தூள் - 2 தேக்கரண்டி Ø   தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி Ø   கடுகு - 1 தேக்கரண்டி Ø   கறிவேப்பிலை - 2 இணுக்கு Ø   உப்பு - தேவைக்கு. செய்முறை : v   கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். v   ஊறவைத்த கடலையை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் , தேவைக்கு உப்பு போட்டு மூடி 10 விசில் விட்டு , வேக வைத்து எடுக்கவும். v   வெங்காயம் , தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும். v   ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அத்துடன் மல்லிப்பொடி , சீரகப்பொடி , பெருஞ்சீரகப் பொடி , மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும். v   வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக

சுவையான காலிபிளவர் மசாலா குழம்பு

காலிபிளவர் குழம்பு செய்ய தேவையானவை காலிபிளவர் – 1, உருளைக்கிழங்கு – 3, தக்காளி – 4, பச்சைப் பட்டாணி – ¼ கோப்பை, பெரிய வெங்காயம் – 2, உப்பு, கொத்துமல்லி – தேவையான அளவு, அரைக்க: மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி, தனியாத்தூள் – ½ தேக்கரண்டி, சோம்பு – ½ தேக்கரண்டி, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பற்கள், தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி, பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி. காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளவும்.  உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.  பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.  பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.  பிறகு, பாத்திரத்தை வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் சேருங்கள்.  வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். 

மைசூர்பா

தேவையான பொருள்கள்: கடலை மாவு – 1 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 2 1/2 கப் செய்முறை: கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும். நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும்.  கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.  சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும். மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும். கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும்.  சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவ

தேன் மிட்டாய்

தேவையான பொருள்கள் : புழுங்கல் அரிசி - 4 கப் முழு உளுந்து - ஒரு கப் சீனி - 4 கப் தண்ணீர் - ஒரு கப் ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை : 1.அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும். 2.அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். (இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது) 3.அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். 4.ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும். 5.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும். 6. உருண்டைகள் பொரிந்து மேலே வரும். 7.பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும். 8.ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.