Skip to main content

குலாப் ஜாமூன்


தேவையான பொருள்கள் :

  • பால் பவுடர் - 2 1/2 கப்
  • பால் - தேவையான அளவு (கலப்பதற்கு)
  • நெய் (அ) டால்டா - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 5 கப்
  • பேக்கிங் பவுடர் - சிறிது
  • மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
  • நெய் (அ) எண்ணெய் - அரை கப் (பொரிப்பதற்கு)


செய்முறை :


  • பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் (அ) டால்டா சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
  • மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். 
  • காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். 
  • அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.
  • டேஸ்டி குலாப் ஜாமுன் ரெடி. 
  • குறைந்தது 3 - 4 மணி நேரம் வரை குலாப் ஜாமூன் பாகில் ஊற வேண்டும்.


Comments